நான் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன். எனக்கு அவரை பிடித்து இருந்தது, ஆனால், தெரியாத ஆணுடன் எப்படி பழகுவது. ஒரு வேலை அவர் கெட்டவராக இருந்தால் என்ன செய்வது, என்றெல்லாம் என் மனதிற்குள் நிறைய கேள்விகள் ஊடுருவ ஆரம்பித்தது. நான் அவரிடம் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், நாம் இருவரும் தனியாக ஒரு உணவகத்தில் சந்தித்து பேசலாம், என்னால் சட்டென்று முடிவு எடுக்க முடியவில்லை என்றேன்.
அவர் என்னிடம், நீ கவலை படாதே, இன்று இரவு நாம் இந்த உணவகத்தில் சந்திக்கலாம் என்றார். நானும் அவரை பார்த்ததில்லை, அவரும் என்னை பார்த்ததில்லை, ஆம் நான் பெண் உடை அணிந்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பினேன், ஆனால் அதிலும் என் முகத்தை காண்பிக்கவில்லை. அவர் சொன்ன இடத்திற்கு அவர் சொன்ன நேரத்திற்கு நான் சென்றேன். ஆண் உடையில் தான், பெண் வேடம் அணிந்து வெளியே செல்ல எனக்கு தைரியம் இல்லை.
இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்று எனக்குள் ஏக்கம், நான் வந்து பதினைந்து நிமிடம் ஆனது, இன்னும் அவர் வரவில்லை. எனக்கு சற்று கோவம் வந்தது, எனக்கு பயம் அதிகமானது, யாரோ நம்மை வைத்து விளையாடுகிறார்களோ என்று பயந்தேன். அந்த இடத்தில இருந்து கெளம்பி விடலாம் என்று முடிவு எடுத்தேன். அப்போது பின்னாடி இருந்து ஒரு கை என் தோலில் கை வைத்தது. அப்போது ஒரு கம்பீரமான குரல் ஒன்று என்னிடம் "நான்தான் பாலா" என்றது.
தொடரும்....
No comments:
Post a Comment